×

அருவங்காடு பகுதியில் ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட காவல் நிலையம் திறப்பு

குன்னூர்: விதிமீறி கட்டப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த காவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அருகே பழைய கட்டிடத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. பழமையான கட்டிடம் என்பதால் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு புதிய காவல் நிலையம் கட்டப்பட்டது. ஆனால், விதிமீறி கட்டப்பட்டு டிரிபிள் ஏ கமிட்டியின் அனுமதி கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காவல் நிலையம் திறப்பதில் இழுபறி ஏற்பட்டது.

இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்பட்டாமல் கிடப்பில் போடப்பட்டது.இதைத்தொடர்ந்து உரிய அனுமதி பெறப்பட்டு நேற்று பேண்ட் வாத்தியங்கள் முழங்க காவல் நிலைய திறப்பு விழா நடந்தது. விழாவில், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பொதுமேலாளர் சஞ்சய் வாக்லே, நீலகிரி எஸ்பி சசிமோகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில், 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அருவங்காடு வியாபாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு காவல் நிலையம் திறக்கப்பட்டதால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : police station ,Opening ,Aruvankadu , police station
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்