×

அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை தாண்டி ஒரு ரூபாய் கூட அதிகமாக வசூலிக்கக் கூடாது : தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!!

சென்னை : தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர். மாணவர்களின் எதிர்க்காலத்தைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர்.

இந்த நிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக அனைத்து தனியார் கல்லூரிகளுக்கும் தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்துள்ள மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழுவிடம் மாணவர்கள் புகார் அளிக்கலாம்.அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை தாண்டி ஒரு ரூபாய் கூட வசூலிக்கக் கூடாது. அவ்வாறு வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : government ,colleges ,Tamil Nadu , Fees, Private Medical Colleges, Government of Tamil Nadu, Warning
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...