×

அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா?: மநீம தலைவர் கமல் பேட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். பாரத் நெட் விவகாரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சிப் பணி அனுபவமுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக தமிழக அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய சந்தோஷ் பாபு பணி ஓய்வு பெறுவதற்கு 8 ஆண்டுகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் திடீரென விருப்ப ஓய்வு பெற்றார்.

கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை கமல்ஹாசன் பொதுச்செயலாளராக நியமித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா? என சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ரஜினிக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம், அவர் நலமாக இருக்க வேண்டும் என கூறினார். சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் எனவும் கூறினார்.


Tags : Rajini ,Kamal Patti , Support to all, support to friend Rajini, support, Iruppena, Kamal interview
× RELATED ரஜினியிடம் ஆதரவு கேட்கும் போது...