×

தரமற்ற கட்டுமானத்தால் இடிந்து விழுந்த ஊரணியின் தடுப்புச்சுவர்

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சியில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் தரமற்று கட்டப்பட்டதால் இடிந்து விழுந்தது. சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் சிவன்கோயில் ஊரணி உள்ளது. இங்கு மழை காலத்தில் சாயல்குடி பெரிய கண்மாயிலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிரப்பப்படுவது வழக்கம். தண்ணீர் தேங்கி கிடந்தால் அதனை அரண்மனை தெரு, சதுரயுக வள்ளி தெரு, காயம்புகோயில் தெரு, ஆள்காட்டி ஊரணி தெரு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தெருக்களை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கு, துணிகள் துவைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் அருகிலுள்ள சிவன்கோயில், வழிவிடு முருகன் கோயில் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும். ஊரணியில் தண்ணீர் தேங்கினால் கரையின் மண் சரிந்து தண்ணீர் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் 2012ம் ஆண்டு ரூ.30 லட்சம் மதிப்பில் கிழக்கு, தெற்கு பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. பிறகு மேற்கு பகுதியில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. தடுப்புச்சுவர்கள் அமைக்கும் போது பழை கட்டுமானங்களை அகற்றாமல், அதன்மேல் புதிய தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. தரமற்று கட்டியதால் தற்போது முழுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்தது.

இங்குள்ள சிவன்கோயில், முருகன், கண்ணன், ஆஞ்சநேயர், ஐயப்பன் கோயில்களுக்கு வெள்ளி, செவ்வாய், சனிக்கிழமைகள் மற்றும் விஷேச நாட்களில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். அப்போது இடிந்த பகுதி வழியாக நடந்து செல்கின்றனர்.

இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால் அருகிலுள்ள பெரிய கண்மாய் நிறைந்தால், அதிலிருந்து இந்த ஊரணிக்கு தண்ணீர் பாய்ச்சப்பட உள்ளது. இடிந்து கிடக்கும் சுவரால் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்படும் என அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

எனவே இடிந்து விழுந்த கட்டுமானங்களை அகற்ற வேண்டும். புதிதாக தரமான தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். தரமற்ற பணிகளை மேற்பார்வையிட்டு, நிதி வழங்கிய உதவி பொறியாளர், செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாயல்குடி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளசாயல்குடி, டிச.1: சாயல்குடி பேரூராட்சியில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் தரமற்று கட்டப்பட்டதால் இடிந்து விழுந்தது.

சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் சிவன்கோயில் ஊரணி உள்ளது. இங்கு மழை காலத்தில் சாயல்குடி பெரிய கண்மாயிலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிரப்பப்படுவது வழக்கம். தண்ணீர் தேங்கி கிடந்தால் அதனை அரண்மனை தெரு, சதுரயுக வள்ளி தெரு, காயம்புகோயில் தெரு, ஆள்காட்டி ஊரணி தெரு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தெருக்களை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கு, துணிகள் துவைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் அருகிலுள்ள சிவன்கோயில், வழிவிடு முருகன் கோயில் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும். ஊரணியில் தண்ணீர் தேங்கினால் கரையின் மண் சரிந்து தண்ணீர் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் 2012ம் ஆண்டு ரூ.30 லட்சம் மதிப்பில் கிழக்கு, தெற்கு பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. பிறகு மேற்கு பகுதியில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. தடுப்புச்சுவர்கள் அமைக்கும் போது பழை கட்டுமானங்களை அகற்றாமல், அதன்மேல் புதிய தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. தரமற்று கட்டியதால் தற்போது முழுமையாக சேதமடைந்து இடிந்து விழுந்தது. இங்குள்ள சிவன்கோயில், முருகன், கண்ணன், ஆஞ்சநேயர், ஐயப்பன் கோயில்களுக்கு வெள்ளி, செவ்வாய், சனிக்கிழமைகள் மற்றும் விஷேச நாட்களில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். அப்போது இடிந்த பகுதி வழியாக நடந்து செல்கின்றனர்.

இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால் அருகிலுள்ள பெரிய கண்மாய் நிறைந்தால், அதிலிருந்து இந்த ஊரணிக்கு தண்ணீர் பாய்ச்சப்பட உள்ளது. இடிந்து கிடக்கும் சுவரால் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்படும் என அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். எனவே இடிந்து விழுந்த கட்டுமானங்களை அகற்ற வேண்டும். புதிதாக தரமான தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். தரமற்ற பணிகளை மேற்பார்வையிட்டு, நிதி வழங்கிய உதவி பொறியாளர், செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாயல்குடி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Sayalgudi
× RELATED ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...