×

வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தடுப்புப்பணிகள் உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையானது நடைபெற்று வருகிறது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தென் கிழக்கு, தென் மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது. திருகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது புயல் சின்னம்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுவடைந்து இலங்கையை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் திருகோணமலையில் கரையைக் கடக்கும் புயல், பின்னர் குமரிக்கடல் நோக்கி வரும். இதனால் தென் தமிழகம் மற்றும் கேரளாவில் அதீத கனமழை பெய்யும். நாளை மாலை இரவில் புரெவி புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை பெய்த வடகிழக்கு பருவமழையின் அளவு, நிவர் புயல் பாதிப்புகள், இழப்பீடு, வர உள்ள புரெவி புயல் மற்றும் அதன் முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தடுப்புப்பணிகள் உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.

Tags : Palanisamy ,ministers ,storm ,monsoon , Chief Minister Palanisamy consults with ministers and officials on northeast monsoon and storm
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...