ஒரு வாரத்திற்கு தங்கம் விலையில் ஏற்றம்... சவரன் ரூ.104 உயர்ந்து ரூ.36,256க்கு விற்பனை : நகை வாங்குவோர் ஏமாற்றம்!!

சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1,832 குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. கடந்த 23ம் தேதி முதல் தங்கம் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தொடர்ந்து 6 நாட்களில் சவரன் ரூ.1,392 அளவுக்கு குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. விலை குறைவால் நகை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். இதனால், கடந்த ஒரு வாரமாக நகைக்கடைகளில் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும்.

அதனால், அன்றைய தினம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று காலை மீண்டும் தொடங்கியது.அதில் நகை வாங்குவோருக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தங்கம் விலை கிடுகிடுவென சரிவை சந்தித்தது. ஒரு கிராம் ரூ.4,519க்கும், ஒரு சவரன் ரூ.36,152க்கும் விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு தங்கம் விலை ரூ.1,832 சரிந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 13 உயர்ந்து ரூ. 4,532க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் ரூ.104 உயர்ந்து ரூ.36,256க்கு விற்கப்படுகிறது. அதே போல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 64.60க்கு விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக 6 நாட்கள் தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், இன்று விலை உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

Related Stories: