×

இன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4-ஆக பதிவு

ரஷ்யா: ரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் வெளியாகவில்லை. மேலும் நிவநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். 2020ம் ஆண்டு தொடங்கியது முதலாக உலகம் முழுவதும் பல்வேறு பேரிடர்களை சந்தித்து வருவதாக பலர் நம்புகின்றனர்.

அதற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் முதற்கொண்டு பல இயற்கை பேரிடர்களையும் பல நாடுகள் சந்தித்து வருகின்றன. இதேபோல் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ரஷ்யா நாட்டின் கிழக்கு குரில் தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்ந நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.5-ஆக பதிவாகி இருந்தது. கடந்த காலங்களில் இந்த வலிமையின் பூகம்பங்கள் சுனாமி மையப்பகுதியிலிருந்து வெகு தொலைவில் ஏற்படுத்தியிருந்தது என ரஷ்ய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது.


Tags : earthquake ,city ,Sovitskaya Kavan ,Russia , Russia, Soviet city, earthquake, magnitude 6.4
× RELATED இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்