×

ரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

ரஷ்யா: ரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று  அதிகாலை 4.24 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் வெளியாகவில்லை.


Tags : earthquake ,Russia , Severe earthquake in Russia; Recorded as 6.4 on the Richter scale
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த...