டிச-01: பெட்ரோல் விலை ரூ.85.31, டீசல் விலை ரூ.77.84

சென்னை: சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 85.31 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.84 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 85.31 ரூபாய், டீசல் லிட்டர் 77.84 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

Related Stories: