×

டெல்லியின் காற்றின் தரம் : மோசம் பிரிவில் நீடிப்பு

புதுடெல்லி: டெல்லியின் வீசிய அமைதியான காற்று மற்றும் குறைந்தப்ச வெப்பநிலை பதிவு போன்ற காரணங்ளால் நகரின் காற்றின் தரம் “மிகவும் மோசமாக” மாறியது. தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. நேற்று காலை நகரின் காற்றுத் தரக்குறியீடு எண் 307 ஆக இருந்தது. இது கடந்த 24 மணிநேரத்தில் ஞாயிறன்று சராசரி காற்றுத்தரக்குறியீடு எண் 268 ஆகவும், சனிக்கிழமை 231, வெள்ளியன்று 137, வியாழனன்று 413 ஆகவும் பதிவானது. இரவு நேரங்களில் காற்று வீசும் வேகம் குறைந்து அமைதியாக இருந்தது. பகலில், அதிகபட்ச காற்றின் வேகம் 10 கி.மீ வேகத்தில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், இதுபோன்ற காரணங்களால் அடுத்து இரண்டு நாட்களில் காற்றின் தரம் மேலும்  பாதிப்படைந்து தற்போதுள்ள மோசம் பிரிவிலிருந்து மிகவும் மோசம் பிரிவுக்கு செல்லும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.  அதிகபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. இதுதவிர, அறுவடை காலம் முடிந்துவிட்டதால் பயிர்கழிவுகள் எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது.  இதனால், டெல்லியின் காற்றுமாசு  பி.எம் .2.5 அளவில், அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்கழிவு எரிப்பு சம்பவங்களால் ஏற்படும் மாசு பங்களிப்பு விகிதம் ஞாயிறன்று 6 சதவிகிதமாவும், சனிக்கிழமை 4 சதவிகிதமாகவும், வெள்ளிக்கிழமை 2 சதவிகிதம் மற்றும் வியாழக்கிழமை வெறும் 1 சதவிகிதமாக இருந்ததாக மத்திய புவி அறிவியல் துறை தெரிவித்துள்ளது.

* காற்றின் தரத்தை பொறுத்தவரை, காற்றுதரக்குறியீட்டு எண்  50 வரை இருப்பின் அது நல்ல காற்று
* 51-100 வரை இருப்பின் திருப்தி, 101-200 வரை மிதமானது
* 201 மற்றும் 300 மோசம் பிரிவிலும், 301 மற்றும் 400 மிக மோசம் , 401 மற்றும் 500 ஆகிய இரு அளவீடுகளும் கடுமையானது



Tags : Delhi , Air quality in Delhi: prolongation in the bad segment
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...