×

மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க அப்பாவி பெண்ணை கொன்ற வக்கீல் தம்பதிக்கு இரட்டை ஆயுள்: கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கோவை: கோவையில் மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க அப்பாவி பெண்ணை கொலை செய்த வழக்கில் வக்கீல் தம்பதி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (52). இவரது மனைவி மோகனா (47). இருவரும் வக்கீல்கள். 3 குழந்தைகள் உள்ளனர். மோகனா ஒடிசாவில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் ரூ.12 கோடி மோசடி தொடர்பாக மோகனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதிலிருந்து தப்பிக்க ராஜவேலும், மோகனாவும் சதி திட்டம் ஒன்று தீட்டினர். மோகனா இறந்ததுபோல் சான்றிதழ் வாங்க முடிவு செய்தனர்.  இந்த நேரத்தில் இடபிரச்னைக்காக வக்கீல் ராஜவேலுவை சந்தித்த சாயிபாபா காலனியை சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி அமாவாசையை (45) கடந்த 2011 டிசம்பரில் கேபிள் ஒயரால் கழுத்தை இறுக்கி ெகாலை செய்தனர். இதற்கு கார் டிரைவர் பழனிச்சாமி (45) உதவியுள்ளார்.

 சடலத்தை ஆத்துப்பாலம் மின் மயானத்தில் எரித்துவிட்டு, இறந்தது மோகனாதான் என கோவை மாநகராட்சியில் இறப்பு சான்று பெற்றனர். இதை காட்டி, ஒடிசா மாநில மோசடி வழக்கில் இருந்து மோகனா தப்பினார். இதற்கிடையே கடந்த 2013ல் மோகனா கோவையில் ஒரு இடம் வாங்குவதற்காக பத்திர பதிவு அலுவலகம் சென்றார். அவரது ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவர் இறந்து விட்டதாக இறப்பு சான்று பெற்ற விவகாரம் வெளியே வந்தது. இது தொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ேபாலீசில் புகார் தரப்பட்டது. இது தொடர்பாக ரேஸ்ேகார்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தபோது அமாவாசை கொலை செய்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வக்கீல் தம்பதியரும் டிரைவர் பழனிச்சாமியும் கைதாகினர். இந்த வழக்கை ேகாவை 5வது கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி பாரூக் விசாரித்து ராஜவேல், மோகனா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கார் டிரைவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி நேற்று தீர்ப்பளித்தார்.

தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும், ராஜவேலுக்கு ₹80 ஆயிரம், மோகனாவிற்கு ₹55 ஆயிரம், பழனிச்சாமிக்கு ₹30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இறந்த அமாவாசையின் வாரிசுகளுக்கு ரூ.1.20 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது. தீர்ப்பிற்கு பின்னர் குற்றவாளிகள் 3 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : court ,lawyer couple ,Coimbatore , Escape from fraud case Killing an innocent woman Double life for lawyer couple: Coimbatore court sensational verdict
× RELATED நகை பறிமுதல் விவகாரம் கோவை போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும்