பிடிஓவின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜவினர் பிரதமர் படம் வைக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பூட்டு

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கடந்த 23ம் தேதி பிரதமர் மோடியின் படத்தை பாஜ கவுன்சிலர்கள் மாட்டினர். அந்த படம் அகற்றப்பட்டது. இதனை கண்டித்து நேற்று சத்திரக்குடி பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து மோடியின் படத்தை ஒன்றிய அலுவலகத்தில் வைப்பதற்காக ஊர்வலமாகச் சென்றபோது, பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் தடுத்து நிறுத்தி 5 பேர் மட்டும், சென்று படத்தை கொடுக்க அனுமதி அளித்தார்.

அலுவலகத்தில் படத்தை வாங்க வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) செல்லம்மாள் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாஜவினர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கதவை இழுத்துப் பூட்டினர். இதையடுத்து பிடிஓ செல்லம்மாள், அரசு ஜீப்பில் ஏறி கிளம்பிச் செல்ல முயன்றார். அப்போது ஜீப்பை பாஜவினர் முற்றுகையிட்டு சரமாரியாக எட்டி உதைத்தனர். டிரைவர் ஜீப்பை ரிவர்சில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

Related Stories: