ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60 சதவீத ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகள் உள்ளன. இதில் வையாவூர், நத்தப்பேட்டை, எறையூர் தேவனேரி, தாத்தனூர், குண்டுப் பெரும்பேடு, ஆரனேரி உள்பட 538 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

இதேபோல், 270 ஏரிகளில் 75 சதவீதத்துக்கு அதிகமாகவும், 101 ஏரிகளில் 50 சதவீதத்து–்கு அதிகமாகவும் நீர் நிரம்பியுள்ளது. மாவட்டத்தில் முக்கிய ஏரிகளான தாமல் ஏரிக்கு கணிசமான நீர்வரத்தும், தென்னேரி ஏரி, பெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி , மணிமங்கலம் ஏரிகளில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் இந்தாண்டு விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: