வீட்டை உடைத்து கொள்ளை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த மண்ணிவாக்கம், புதுநகரில் வீட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மண்ணிவாக்கம், புதுநகர் குறிஞ்சி பூ 2வது தெருவை சேர்ந்தவர் முத்து (69).

இவரது மனைவி தனலட்சுமி (63). கடந்த 25ம் தேதி முத்து, குன்றத்தூரில் உள்ள மகளின் வீட்டு கிரக பிரவேசத்துக்கு சென்றனர். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 8 சவரன் நகை, ₹10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>