×

கான்ட்ராக்டரிடம் 2 லட்சம் அபேஸ்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த தம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (39). தனியார் மற்றும் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்கிறார். இந்நிலையில், நேற்று காலை அன்பு, வாலாஜாபாத் இந்தியன் வங்கிக்கு சென்றார். அங்கு, தனது வங்கி கணக்கில் இருந்து ₹2 லட்சம் எடுத்தார். பின்னர், அந்த பணத்தை தனது பைக் பெட்டியில் வைத்து கொண்டு தம்மனூர் கிராமத்துக்கு புறப்பட்டார். வாலாஜாபாத் ரவுண்டானா அருகே சென்றபோது, அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது, பைக் பெட்டி திறந்து இருந்தது. போலி சாவி மூலம், அதில் இருந்த ₹2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின்படி வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : contractor , 2 lakh apes to the contractor
× RELATED நாமக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ. 2 லட்சம் கொள்ளை