விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தலைமையில் பரப்புரை: காஞ்சிபுரத்தில் தொடங்கியது

காஞ்சிபுரம்: விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்தோடு, திமுக கொள்கை பரப்பு செயலாளர் தலைமையில் காஞ்சிபுரத்தில்  பரப்புரை தொடங்கியது. வரும் 20121 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்தோடு, திமுக தேர்தல் பரப்புரை தொடங்கப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று காஞ்சிபுரம் வந்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் இருந்தனர்.  பின்னர், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பிரசார பயணத்தை தொடங்கினார்.கீழ்கதிர்பூர் கிராமத்தில் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அறிவிக்கப்பட்ட பட்டு பூங்கா திட்டத்தை நிறைவேற்ற முயலாத அதிமுக அரசை கண்டித்தும், அந்த பகுதி மக்களை சந்தித்து உரையாடினார். பின்னர், பெரும்பாக்கம் பாலாற்றில் தடுப்பணை கட்டக்கோரி பெரும்பாக்கம், விஷார், நரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

மேலும், காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் நெசவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் நெசவுத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சமத்துவ உணவு நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், தசரதன், மாணவர் அணி அபுசாலி, நெசவாளர் அணி தமிழ்ச்செல்வன், வர்த்தக அணி வி.எஸ்.ராமகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories: