நைஜீரியாவில் பயங்கரம் கைகளை கட்டி கழுத்தறுத்து 110 விவசாயிகள் படுகொலை

அபுஜா: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் போகோஹரம் தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போர்னோ ஸ்டேட் பகுதி அருகே தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசோப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அங்கு வந்த போகோஹரம் தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். பல விவசாயிகளை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். கையில் சிக்கியவர்களின் கைகளை கட்டி கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் 110 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் வேலை தேடி பல்வேறு பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள். அதோடு, அங்கு பணியில் இருந்த பெண்கள் பலரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இந்த ஆண்டில் நைஜீரியாவில் நடந்த மிகக்கொடூர தீவிரவாத தாக்குதல் சம்பவம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  இந்த சம்பவத்தை ஐ.நா. அமைப்பின் குடியிருப்பு மற்றும் மனிதநேய ஒருங்கிணைப்பாளர் எட்வர்டு கேல்லன் உறுதிப்படுத்தி உள்ளார். கொடூர தாக்குதலில் பலியானவர்களின் சடலங்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories:

>