
வாஷிங்டன்: அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி 95% பலன் அளிப்பதாக 3ம் கட்ட பரிசோதனையில் தெரியவந்தது. இந்நிலையில், இறுதி கட்ட ஆய்வின் அடிப்படையில் மாடர்னா மருந்து 100 சதவீதம் செயல்திறனை கொண்டுள்ளதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்துக்காக விண்ணபிக்க உள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.