தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

பார்ல்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து  3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கேப்டவுனில் நடந்த  முதல் டி20ல் தென் ஆப்ரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.இந்நிலையில் 2வது டி20 போட்டி பார்லில் நடந்தது. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு  146 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் டி காக் 30, ஜார்ஜ் லிண்டே 29, வாண்டெர் டுசன் 25* ரன் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 2, ஆர்ச்சர், டாம் கரன், கிறிஸ் ஜார்டன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து 4விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக  டேவிட் மாலன் 55, பட்லர் 22, ஸ்டோக்ஸ் 16, கேப்டன் மோர்கன்  ஆட்டமிழக்காமல் 26* ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் டேப்ரைஸ் ஷம்சி  4 ஓவரில் 19 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து  3 விக்கெட் வீழ்த்தினார். லுங்கி என்ஜிடி 2, காகிசோ ரபாடா ஒரு விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக டேவிட் மாலன் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றி உள்ளது. எஞ்சியுள்ள கடைசி டி20 போட்டி கேப்டவுனில்  இன்று நடைபெற உள்ளது.

Related Stories: