×

சில்லி பாயின்ட்...

* இங்கிலாந்தின் ஹைபரி நகரில் உள்ள எமிரேட்ஸ் ஸ்டேடியத்தில் உல்வர்ஹாம்ப்டன் - கன்னர்ஸ் அணிகளிடையே நடந்த பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில், எதிர்பாராத விதமாக கன்னர்ஸ் வீரர் டேவிட் லூயிசுடன் மோதிக்கொண்ட உல்வ்ஸ் வீரர் ராவுல் ஜிமனஸ் படுகாயம் அடைந்தார். மண்டையோட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு அவசர அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
* கால்பந்து நட்சத்திரம் மரடோனா மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், முன்னதாக மூளை அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக டாக்டர் லியோபோல்டோ லூக்கின் கிளினிக்கில் ரெய்டு நடத்தப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* இந்திய அணியுடன் சிட்னியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக தனக்கு கடுமையான தலைசுற்றல் இருந்ததாகவும், அந்த போட்டியில் விளையாட முடியுமா என சந்தேகப்பட்டதாகவும் தொடர்ச்சியாக 2வது சதத்தை விளாசி அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
* இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது காயம் அடைந்த ஆஸி. அணி தொடக்க வீரர் வார்னர், கடைசி ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.Tags : Roulette Point ...
× RELATED சில்லி பாயின்ட்...