×

மரடோனாவுக்கு மரியாதை

கால்பந்து உலகின் உச்ச நட்சத்திரம் டீகோ மரடோனா (அர்ஜென்டீனா) மறைந்து சில நாட்களாகியும் அவருக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்கதையாக உள்ளது. ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் நேற்று பார்சிலோனா-ஓசாசுனா அணிகள் மோதின. இந்த போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் ஓசாசுனா அணியை வீழ்த்தியது.

ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் கோல் அடித்த நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது சீருடையை கழற்றி உள்ளே அணிந்திருந்த மரடோனாவின் ட்ரேட் மார்க் 10ம் எண் சீருடையை வெளிக்காட்டியதுடன், மரடோனாவைப் போன்றே கையை உயர்த்தி சைகை காட்டி வானத்தை நோக்கி அஞ்சலி செலுத்தும் வகையில் வணங்கினார். அதேபோல் இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரில் களமிறங்கிய நேபோலி அணி வீரர்களும் மரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags : Respect for Maradona
× RELATED மரடோனா நினைவு கால்பந்து போட்டி தோடர் பழங்குடியின அணி சாம்பியன்