ஒரே நாளில் சென்னையில் 5 விமானங்கள் திடீர் ரத்து

சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 5 விமானங்கள் புறப்படுவது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 6.55 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விமானம், காலை 7 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம், காலை 8.45 மணிக்கு கொச்சி செல்ல வேண்டிய விமானம் ஆகிய 3 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டன. முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் டிக்கெட்கள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டன. அதைப்போல் அகமதாபாத்திலிருந்து நேற்று பகல் 12.15 மணிக்கு சென்னை வரும் விமானம், கொச்சியிலிருந்து பகல் 12.15 மணிக்கு சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டன. நேற்று ஒரேநாளில் போதிய பயணிகள் இல்லாமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: