வேளாண் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இடஒதுக்கீடு கலந்தாய்வு

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பிற்கான சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2020-2021 கல்வியாண்டிற்கான இளங்கலை படிப்பிற்கு சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான நேரடி கலந்தாய்வு சேர்க்கை நேற்று துவங்கியது. நேற்று நடந்த கலந்தாய்வில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 14 இடங்களில் 12 பேரும், மாற்றுத்திறனாளிக்கான 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டில் 38 மாணவர்களும் கலந்துகொண்டு விருப்பமான கல்லூரியை தேர்வு செய்தனர். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு நாளை இணையதளம் வாயிலாக அறிவிக்கப்படும். மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. சிறப்பு இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை பதிவாளர் வழங்கினார்.

Related Stories: