பொட்டுக்கடலை முறுக்கு

எப்படிச் செய்வது?

அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, உளுத்த மாவு, உப்பு, எள், சீரகம், பெருங்காயத்தூள் போட்டு கலந்து கொள்ளவும். அதனுடன் சூடான எண்ணெய் சிறிது சேர்த்து பிசையவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக பிழிந்து வேகவிட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.