×

டிசம்பர் இறுதி வரை பள்ளிகளை திறக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை இருக்கும். தமிழக அரசு கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மேற்கோண்டு வரும் நடவடிக்கைகள் நல்ல பயன் தருகிறது. இந்த வேளையில் டிசம்பர் மாதத்தில் மழைக்கும் வாய்ப்பிருப்பதால் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் மாதம் இறுதி வரை திறக்கப்படாமல் இருப்பது சிறந்தது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
தமிழகம் வரும் மத்திய குழு நிவர் புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் தேவையான நிவாரணத்தை வழங்க, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முறையாக முழுமையாக ஆய்வு செய்திட வேண்டும். மத்திய அரசும், நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தமிழக அரசு கேட்கும் நிதியை வழங்க வேண்டும்.

Tags : Schools ,GK Vasan , Schools should not be open till the end of December: GK Vasan insists
× RELATED 10 மாதங்களுக்குப் பின் இன்று பள்ளிகள் திறப்பு