செத்துப்போன மொழிக்கு செய்தி அறிக்கை எதற்கு? வைகோ கண்டனம்

சென்னை: செத்துபோன மொழிக்கு செய்தி அறிக்கை எதற்கு என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக இந்தியைத் திணித்து வருகின்ற பாஜ மோடி அரசு, அடுத்த கட்டமாக செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் 25,000 பேர் கூடப் பேசாத ஒரு மொழிக்கு அனைத்து மாநில மொழி வானொலிகள், தொலைக்காட்சிகளிலும் 15 நிமிடங்கள் செய்தி அறிக்கை வாசிக்க வேண்டும் என்ற கட்டளையை மோடி அரசு பிறப்பித்து இருக்கின்றது. தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வந்த முதன்மையான நேரங்களில் இந்தி நிகழ்ச்சிகளைக் கட்டாயமாகத் திணித்ததுடன், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சிப்பதற்கு வன்மையாக கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, வானொலி, தொலைக்காட்சிகளில் சமஸ்கிருத செய்தி அறிக்கை வாசிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: