பாலாற்றின் நடுவே மணல் திட்டில் சிக்கி 5 நாட்களாக தவித்த நாய், குட்டிகளுடன் மீட்பு

சென்னை: பாலாற்றின் நடுவே மணல் திட்டில் சிக்கிய நாய், 5 குட்டிகளுடன் பத்திரமாக மீட்கப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்று பகுதியில் கடந்த 5 நாட்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், பாலாற்றின் நடுவே மணல் திட்டு பகுதியில் ஒரு நாய், 5 குட்டிகளுடன் தவித்து வந்தது. ஆற்றில் தண்ணீர் செல்வதால், அந்த நாய், குட்டிகளுடன் வெளியேற முடியாமல் பசியுடன் தவித்து வந்தது. இதை பார்த்த பொதுமக்கள், மதுராந்தகம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வீரர்கள், நேற்று மாலை அங்கு சென்று, பாலாற்று பாலத்தில் கயிறு கட்டி இறங்கி நாய் மற்றும் அதன் 5 குட்டிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர், அதனை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து பாதுகாப்பான இடத்தில் விட்டனர். 5 நாட்களாக ஆற்று மணல் திட்டில் சிக்கி, வெள்ளநீர் சூழ்ந்து உயிருக்கு போராடிய நாய் மற்றும் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories: