வருகிற 5ம் தேதி ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு நாள்: இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி

சென்னை: அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு நாளான வருகிற 5ம் தேதி காலை 10.45 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொது நிகழ்ச்சிகளில் 200 பேருக்கும் மேற்படாத வகையில் மக்கள் கலந்துகொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட  செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும் பங்குபெற வேண்டும். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதா உருவப் படத்தை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.

Related Stories: