விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து சதுப்பேரிக்கு தண்ணீர் திறப்பு: எம்எல்ஏ நந்தகுமார் ஏற்பாடு

பள்ளிகொண்டா: விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து சதுப்பேரிக்கு எம்எல்ஏ ெசலவில் தண்ணீர் திருப்பி விடும் பணி நடந்தது. இதில் கொட்டும் மழையிலும் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் பங்கேற்றார். தமிழகம் முழுவதும் நிவர் புயல் காரணமாக கடந்த 26ம் தேதி கனமழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள், ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மழை அதிகளவில் பெய்தது. ஏரிகளில் அதிகளவில் நீர் வரத்து தொடங்கியது. இருப்பினும் வேலூர் சதுப்பேரியில் நீர் வராததால் விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து சதுப்பேரிக்கு நீரை தனது சொந்த செலவில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் ஜேசிபி இயந்திரம் மூலம் நேற்று திறந்து விட்டார்.

இதை நேற்று மதியம் கொட்டும் மழையிலும் ஆய்வு செய்தார். அப்போது  அவர் கூறுகையில் ‘பொதுப்பணிதுறை அதிகாரிகள் இந்த வேலையை செய்யாததால், எனது சொந்த செலவில் செய்ய முன் வந்தேன். மேலும் ஊர்பொதுமக்களின் முன்னிலையில் அவர்களின் சம்மதத்துடன் இந்த வேலையை செய்தேன்’ என்றார். அப்போது, உடன் ஒன்றிய திமுக செயலாளர்கள் பாபு, ஞானசேகரன், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் வெங்கடேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: