×

‘ராஜ்சமந்தை எம்எல்ஏ கிரண் மகேஸ்வரியின் மரணம் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது: மக்களவை சபாநாயகர் இரங்கல்

குர்கிராம்: ராஜஸ்தானை சேர்ந்த பாஜக பெண் எம்எல்ஏ ஒருவர் கொரோனா தொற்றால் இறந்தார். அவரது மறைவுக்கு மக்களவை சபாநாயகர் இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி (59), கடந்த சில நாட்களுக்கு முன் குர்கிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு ஆளானதால் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு அவர் இறந்தார். இவரது மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘ராஜ்சமந்தை எம்எல்ஏ கிரண் மகேஸ்வரியின் மரணம் மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

அவர் தனது முழு வாழ்க்கையையும் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்தார். அவரது மரணம் எனக்கு தனிப்பட்ட இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடையட்டும், அவரது குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘மறைந்த கிரண் மகேஸ்வரியுடன் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையில் நீண்ட காலம் பணியாற்றினேன். சமூகப் பிரச்னைகளுக்கு, குறிப்பாக பெண்களின் உரிமைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அவர் வலுவாக குரல் எழுப்புவார். துன்புறுத்தப்பட்டவர்களுக்கு எப்போதும் உதவி வந்தார். அவரது தைரியம், புத்திசாலித்தனம் நினைவு கூறத்தக்கது’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : death ,MLA ,Speaker ,Kiran Maheshwari ,Lok Sabha , Rajya Sabha MLA Kiran Maheswari's death alarming: Lok Sabha Speaker condoles
× RELATED தவறி விழுந்த தொழிலாளி சாவு