இன்ஸ்டாகிராம் மூலம் நிகழ்ந்த விபரீதம்; அறிமுகமான 3-வது நாளில் காதலனை தேடி திருவள்ளூருக்கு வந்த 17 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் கைது; நண்பனுக்கு வலைவீச்சு

திருவள்ளூர்: சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான மூன்றே நாளில் காதலனை தேடி திருவள்ளூருக்கு வந்த மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான். அவனது நண்பனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்த 17 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார். இவர், சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சில தகவல்களை பரிமாறியுள்ளார். இதன் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

அறிமுகமான 3 நாட்களிலேயே காதலனை தேடி 17 வயது சிறுமி திருவள்ளூருக்கு வந்துள்ளார். அவரை சந்தித்த காதலன், அந்த சிறுமியை திருப்பாச்சூரில் உள்ள நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது நண்பருடன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையுடன் திரும்பி சென்ற சிறுமி, சில தினங்கள் கழித்து, இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சத்தியவாணி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தார்.

பாலியல் பலாத்காரம் செய்த அவரது நண்பன் தலைமறைவாகி விட்டார். அவனை தேடி வருகிறார். கைதான சிறுவனை திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் காப்பகத்தில் அடைத்தனர்.

Related Stories:

>