×

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு; பாமக போராட்டம் வெற்றி பெறுவது உறுதி: ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரும் முதற்கட்ட போராட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் நாளை தொடங்குகிறது. அடுத்தக்கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மக்கள் திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் என பல நிலைகளில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தவிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் மாபெரும் நிறைவு கட்ட போராட்டம் அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ளது.

அப்போராட்டத்தின் வடிவமும், போராட்ட தேதியும் விரைவில் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும். இந்தப் போராட்டங்கள்  எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. ஆனால், இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். நமது கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு விட்டது. சென்னையில் நாளை முதல் 4ம் தேதி வரை நடைபெறவிருக்கும் போராட்டத்தில் லட்சக்கணக்கில் பங்கேற்க வேண்டும். நமது உரிமைக்காகவே போராடுகிறோம். எனவே, எதற்காகவும் அஞ்சாமல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vanni ,Pama ,volunteers , 20 per cent reservation for Vanni; Pama struggle is sure to win: Letter to Ramadan volunteers
× RELATED வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு...