×

தனது உருவத்தை தத்ரூபமாக வரைந்து அனுப்பிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம்

டெல்லி : தனது உருவத்தை வரைந்து அனுப்பிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் உள்ள பால்வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருபவர் அஜய் டேக். அண்மையில் அஜய் டேக் பிரதமர் மோடியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்தார். அந்த ஓவியத்துடன் ஒரு கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பி வைத்தார். ஓவியத்தைப் பார்த்து வியந்த பிரதமர் மோடி சிறுவனுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “உங்களது ஓவியத் திறமை மிகவும் அபாரம்.கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்திய நாட்டைப் பற்றிய உங்கள் கருத்துகள் உங்கள் எண்ணங்களின் அழகை விளக்குகின்றன. சமூகத்தின் முன்னேற்றத்துக்காக உங்களது படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டும். சமூகத்தில் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உங்கள் நண்பர்களிடம் ஏற்படுத்த திறமையைப் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Tags : Modi ,class student , 6th class student, Prime Minister Modi, compliment, letter
× RELATED 5ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா காரைக்காலில் அரசு பள்ளி மூடல்