போதிய பயணிகள் இல்லாமல் சென்னையில் 5 விமானங்கள் ரத்து

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.55 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விமானம், காலை 7 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம், காலை 8.45 மணிக்கு கொச்சி செல்ல வேண்டிய விமானம் ஆகிய 3 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டன. இதுபற்றி பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் டிக்கெட்கள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டன.

அதேபோல் அகமதாபாத்தில் இருந்து இன்று பகல் 12.15 மணிக்கு சென்னை வரும் விமானம், கொச்சியில் இருந்து பகல் 12.15 மணிக்கு சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டன. இன்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>