புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்ட பாதுகாப்பையும் வழங்கியுள்ளது : பிரதமர் மோடி உரை

வாரணாசி: விவசாயிகளுக்கும், பிற வேளாண் உட்கட்டமைப்புகளுக்கும் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு தேவ் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வாரணாசியில் உள்ள ராஜாதலாப் பகுதியில் இருந்து பிரயாக்ராஜின் ஹண்டியா வரையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது, குரு நானக் ஜெயந்தி மற்றும் தேவ் தீபாவளியை முன்னிட்டு வாரணாசி மேம்பட்ட உள்கட்டமைப்பைப் பெற்று வருகிறது. இது வாரணாசி மற்றும் பிரயாகராஜ் இரு பகுதிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் காசி நகரை அழகுபடுத்துவதோடு, அதனுடன் இணைந்த பணிகளின் பலனையும் இப்போது நாம் காணலாம். வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் நடந்துள்ளன.

விவசாயிகளுக்கும், பிற வேளாண் உட்கட்டமைப்புகளுக்கும் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளோம்.ஒரு பகுதியில் போக்குவரத்து வசதி மேம்படும் போது, அங்குள்ள விவசாயிகளுக்கு பலன் தருகிறது.கடந்த காலங்களில் விவசாய கடன் தள்ளுபடிகள் அறிவித்த போதிலும் அதன் பலன்கள் விவசாயிகளுக்கு சேரவில்லை. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்ட பாதுகாப்பையும் வழங்கியுள்ளது, என்றார். .

Related Stories:

>