×

2ம் நிலை காவலர் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

வேலூர்: தமிழக காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியாகும் பணியிடங்களுக்காக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஆயுதப்படை 2ம்நிலை காவலர் பணிக்கு 3,784 இடங்களுக்கும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2ம் நிலைக் காவலர் பணிக்கு 6,545 இடங்களுக்கும், சிறைத்துறையில் 2ம் நிலைக் காவலர் பணிக்கு 119 இடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 இடங்கள் என மொத்தம் 10,906 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக செப்டம்பர் 26ம்தேதி முதல் அக்டோபர் 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் வரும் 13ம்தேதி 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக நடக்க உள்ளது. அதற்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் நேற்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonilne.org என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த எழுத்துத்தேர்வு 1.20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு பின்னர் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடக்க உள்ள தேர்வு மையங்கள் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Level Guard Exam , 2nd Level Guard Exam Holiday Ticket Issue
× RELATED கஞ்சா விற்பனை 2 பேர் கைது