×

எங்கள் பந்துவீச்சு பயனுள்ளதாக இல்லை: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் 2வது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 389 ரன் எடுக்க, இந்தியா 338 ரன்களே எடுத்து 51 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் 2-1 என ஆஸி. தொடரை கைப்பற்றியது. தோல்விக்கு பின் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: ஆஸ்திரேலிய அணியினர் எங்களை முழுமையாக வெளியேற்றிவிட்டனர். எங்கள் பந்து வீச்சு அவ்வளவு பயனுள்ளதாக இல்லை.

பேட்டிங்கில் சரியான இடத்தில் பந்தை அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது.  இங்குள்ள கண்டிஷன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மிகப்பெரிய இலக்கு என்பதால் ரன்ரேட்டை உயர்த்த நாங்கள் அடித்து விளையாட வேண்டிய நிலையில் விளையாடினோம். அவர்கள் அதை சாதகமாக எடுத்துக் கொண்டு பீல்டிங் அமைத்துவிட்டனர். ஹர்திக் பாண்டியா பந்து வீசியபோது சிறந்ததாக உணர்கிறார். முதலில் ஒன்றிரண்டு ஓவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், சில ஓவர்கள் கூடுதலாக வீசினார். நான், கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்டியா இருந்தால் கடைசி 10 ஓவரில்  100 ரன்கள் வரை எடுக்கலாம் என நினைத்தேன். பிட்ச் பேட்டிங் செய்ய அழகாக இருந்தது, என்றார்.

ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், 2 போட்டிகளிலும் வென்றதில் மகிழ்ச்சி, 300 ரன்களுக்கு மேல் எப்போது வந்தாலும் நல்லது. கடைசி போட்டியில் வார்னர் இல்லாவிடில் பேட்டிங்கை மாற்றி அமைக்கவேண்டும். ஸ்மித் தொடர்ச்சியாக 2 போட்டிகளிலும் சிறப்பாக ஆடினார். ஹென்ட்ரிக்ஸ் எளிய திட்டத்துடன் பந்துவீசினார், என்றார்.

வார்னர் அவுட், கம்மின்ஸ்சுக்கு ஓய்வு
நேற்று பீல்டிங்கின் போது பந்தை பாய்ந்து பிடிக்க முயன்ற வார்னர் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தார். இதையடுத்து அவரை கைத்தாங்கலாக மைதானத்தை விட்டு அழைத்துச் சென்றனர். காயம் காரணமாக அவர் கடைசி போட்டியில் இருந்து விலகி உள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ்சுக்கு கடைசி போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.Tags : bowling ,Virat Kohli , Our bowling was not helpful: Interview with captain Virat Kohli
× RELATED இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள...