×

தமிழகத்தியே உலுக்கிய சம்பவம்: பெண்ணை கொன்று ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை ..!

கோவை: பெண்ணை கொன்று ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவியைக் காப்பாற்ற ஆள்மாறாட்டம் செய்து மற்றொரு பெண்ணை கொன்ற வழக்கில் கோவை சுந்தரபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜவேலு - மோகனா தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கோவை மாவட்டம் சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மனைவி அம்மாவாசை (வயது 45). இவர் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி வக்கீல் ராஜவேல் என்பவரது அலுவலகத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில் ராஜவேலுவின் மனைவி வழக்கறிஞர் மோகனா, ஓடிசாவில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த நிலையில்இ மோகனா மீது 5 வழக்குகள் தொடுக்கப்பட்டது.

இயைடுத்து இந்த வழக்கில் இருந்து அவரை காப்பாற்ற கணவரும், வழக்கறிஞரமான ராஜவேலு முயற்சி செய்துள்ளார். மேலும், அவர் இறந்தது போல் நடித்து வழக்கை முடிவுக்கு கொண்டுவர, ராஜவேலு அலுவலகத்திற்கு குடும்ப வழக்கு தொடர்பாக விவரம் கேட்க வந்த அமாவாசையை நண்பர் பழனிச்சாமியுடன் சேர்ந்து எரித்துக்கொலை செய்தது தெரியவந்துள்ளது. தனது மனைவி மோகனா உயிரிழந்து விட்டதாக இறந்த அம்மாசையின் உடலை காட்டி அனைவரையும் ஏமாற்றி, மாநகராட்சியில் இறப்பு சான்றிதழ் பெற்றார். இறப்பு சான்றிதழை ஒடிசாவில் காட்டி மனைவி மீதான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தார். மேலும், விசாரணையின் போது , அம்மாவாசை கொலை செய்யப்பட்டது தெரியவரவே, காவல் துறையினர் 2013 ம் ஆண்டு ராஜவேலு , அவரது மனைவியையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்: பெண்ணை கொன்று ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் வழக்கறிஞர் தம்பதி ராஜவேலு - மோகனா தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அம்மாவாசையை கொல்ல ராஜவேலுவுக்கு உடந்தையாக இருந்த பழனிச்சாமி என்பவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,incident ,Lawyer , Impersonation, murder, lawyer couple, double life sentence
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...