×

போலீசார் திருவண்ணாமலை பயணம்: திருவள்ளூர் கூவம் ஆற்றில் மணல் கடத்தல் அமோகம்

திருவள்ளூர்: திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா பாதுகாப்பு பணிக்கு, மாவட்டத்தில் உள்ள 400 போலீசார் சென்று விட்டதால், திருவள்ளூர் கூவம் ஆற்றில் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் மணல் திருட்டு சுதந்திரமாக நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு, கடம்பத்தூர், மணவாளநகர், செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குள் கூவம் ஆறு செல்கிறது. இந்த போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசார் நேற்று முன்தினம் திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர். வரும் 3ம் தேதி வரை அங்கு பணியில் ஈடுபடுவதால் மணல் கடத்தல் கொடி கட்டி பறக்கிறது.

குறிப்பாக நரசிங்கபுரம் முதல் கொண்டஞ்சேரி வரை உள்ள பகுதிகளில், மப்பேடு போலீசாரின் ஆசியோடு அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். கூவம் ஆற்றில் இரவு நேரங்களில் நடந்து வந்த மணல் கடத்தல், தற்போது பகல் நேரத்திலும் நடைபெறும் அளவிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் சிலர் கூறுகையில், ‘மணல் கடத்தல் தொழிலில் இரவில் மட்டும் ஈடுபட்டவர்கள் இப்போது ‘ஷிப்ட்’ முறையில் மணல் சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

ஆற்றுப்பகுதிகளில் போலீசார் ரோந்து வராததால், மணல் திருட்டு இரவு, பகலாக நடந்து வருகிறது. எனவே நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், ஆற்று படுகையில் தடையின்றி மணல் கொள்ளை போவதை தடுக்க, மாவட்ட போலீஸ் எஸ்.பி., நடவடிக்கை எடுப்பது அவசியம்’ என்றனர்.

Tags : Thiruvannamalai ,river ,Sand ,Tiruvallur Koovam , Police visit Thiruvannamalai: Sand smuggling rage in Tiruvallur Koovam river
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...