×

தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுகிறது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: தமிழகத்தில்  தங்கத்தின் விலைக்கு நிகராக மணல் விலை உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. அரசு நிர்ணயித்த விலைக்கு மணல் கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.பொது மக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வரம்புக்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, திருச்சி உள்பட்ட மாவட்டங்களில் சட்ட விரோத மணல் கொள்ளை நடைபெறுகிறது.

இதனால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். மேலும், இடைத்தரகர்கள் மூலம் புக்கிங் செய்து விற்கப்படும் மணலின் விலை அதிகமாக உள்ளது எனவே பொதுமக்கள் ஆன்லைன் வழியில் புக்கிங் செய்து நியாயமான விலைக்கு மண் கிடைக்க உரிய வழிவகை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் பொது மக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைப்பதில்லை என்று கூறிய நீதிபதிகள் சாதாரண பொதுமக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு வருகின்ற டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Sand ,Tamil Nadu ,branch judges ,Madurai , Sand price, action, Madurai branch, question
× RELATED மணல் திருடிய லாரி பறிமுதல்