×

மலைச்சாமிபுரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை: மதுரை கிழக்கு தாலுகா கொடிக்குளம் ஊராட்சிக்குட்பட்டது மலைச்சாமி புரம். இப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் ஒரு ரோடு மட்டுமே உள்ளது. முறையான கழிவுநீர் செல்லும் வாய்க்கால் இல்லை. இந்நிலையில் ஒத்தக்கடை, நரசிங்கம், கொடிக்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் நேராக கண்மாய்க்கு செல்ல வேண்டும். அதற்கான வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் நேராக மலைச்சாமிபுரம், கோல்டன் சிட்டி பகுதியின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிட்டது. வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சிறுவர்கள், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால், இந்த கழிவுநீரில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கழிவுநீர் அதிகளவில் தேங்கி நிற்பதால், கொசுக்கள் தேங்கி நிற்கிறது. தற்போது பெய்து வரும் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவி வருகிறது. இதுதொடர்பாக இப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மலைச்சாமிபுரம் மக்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : residence ,Malaichamipuram , Infection, risk
× RELATED மாங்காடு, கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள...