×

ரத்தினம் சாலையில் தடுப்பு சுவர் இல்லாத வாய்க்காலால் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை

கரூர்: கரூர் ரத்தினம் சாலையில் தடுப்புச் சுவர் இன்றி ஆபத்தான நிலையில் உள்ள வாய்க்காலில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையின் வழியாக கரூரில் இருந்து வாங்கல், நெரூர், சோமூர், திருமுக்கூடலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையின் வழியாக செல்கின்றன. மேலும், மார்க்கெட், ரயில் நிலையம், ஐந்து ரோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலையின் வழியாக செல்கிறது.

இந்நிலையில் ரத்தினம் சாலை துவக்கத்தில் வாய்க்கால் குறுக்கிடுகிறது. இந்த வாய்க்கால் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் பீதியுடன் இதனை கடக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது. எனவே இந்த வாய்க்கால் பாலத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையினர் இதனை பார்வையிட்டு பாதுகாப்பு கருதி தடுப்புச் சுவர் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : accidents ,Ratnam Road , Accident
× RELATED புதுக்கண்மாய்க்குள் கொட்டப்படும்...