×

ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியில் கை எட்டும் தூரத்தில் ‘கரண்ட் பாக்ஸ்’

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, முத்தனம்பட்டியில் மின்கம்பத்தில் கை எட்டும் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவிட்ஸ் பாக்ஸால் மின்விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே, கோவில்பட்டி ஊராட்சியில் முத்தனம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆண்டிபட்டி மின்சார வாரியத்தில் இருந்து இக்கிராமத்திற்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் கீழே கை எட்டும் தூரத்தில் மின்சார பெட்டி (சுவிட்ஸ் பாக்ஸ்) உள்ளது. மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த மின்பெட்டியை குழந்தைகள் தொட்டும் விடும் தூரத்தில் உள்ளது. மேலும் மின்சார பெட்டியில் பாதுகாப்பு மூடிகளும் இல்லை. இதனால், கிராம பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து முத்தனம்பட்டி கிராம மக்கள் கூறுகையில், ‘மின்கம்பத்தில் தாழ்வாக இருக்கும் மின்பெட்டியால் சிறுவர்களை விளையாட கூட அனுப்ப முடியவில்லை. இது குறித்து சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மின்விபத்து ஏற்பட்டு, உயிர்ப்பலி ஏற்படும் முன் மின்சாரபெட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Andipatti ,Muthanampatti , Andipatti
× RELATED பெண்கள் பயணிக்க கூடுதல் பெட்டி அமைக்க காஞ்சிபுரம் எம்எல்ஏ கோரிக்கை மனு