×

2021 மார்ச் மாதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேட்டி.!!!

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் டெல்லி நோக்கி பேரணிக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதன்படி, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்றதோடு, அங்கு தொடர்ந்து கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், முகமூடிகளை அணிந்துகொள்வது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா கால நடத்தையை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவை ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்றார். மேலும், அடுத்த ஆண்டின் முதல் 3-4 மாதங்களில், நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள், சுமார் 25-30 கோடி மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான திட்டம் உள்ளது. அதன்படி நாங்கள் தயாராகி வருகிறோம் என்றார்.


Tags : Harsh Vardhan. , Opportunity to give corona vaccine to people in March 2021: Interview with Union Health Minister Harsh Vardhan !!!
× RELATED கொரோனா தொற்று நேரத்தில் 123 நாடுகளுக்கு...