அரசியல் கட்சி தொடங்குவது குறித்து எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் : நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்!!

சென்னை : அரசியல் கட்சி குறித்து தனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  முன்னதாக அரசியல் பிரவேசம் குறித்து  சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜனவரியில் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், கட்சி தொடங்கினால் முதல்வர் வேட்பாளராக ரஜினி தான் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியானது.

மேலும், அரசியலுக்கு வந்தால் ஏற்படக்கூடிய சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்து நிர்வாகிகளுடன் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் சில நிர்வாகிகளின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாகவும் கூட்டத்தில் ரஜினி தெரிவித்துள்ளர். இந்த நிலையில் கூட்டத்திற்கு பின், போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் பிரவேசம் குறித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுத்துவதாக மாவட்ட செயலாளர்கள், என்னிடம் தெரிவித்தனர். மாவட்ட செயலாளர்களின் கருத்தை கேட்ட நான் எனது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டேன். அரசியல் நிலைப்பாடு தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன், என்றார். இதைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் குறித்து பேசிய ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் அசோக், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் ஆகவே மருத்துவர்கள் அறிவுரையை ஏற்க வேண்டியுள்ளதாக  ரஜினி தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.

Related Stories:

>