காக்டெயில்

நன்றி குங்குமம்

மனிதநேயம்...

நகைச்சுவை நடிகர் தவசி அவர்களுக்கு எங்களது மருத்துவமனையில் உணவுக்குழாயில் Oesophageal stent பொருத்தியுள்ளோம். புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம்.

- டாக்டர் பி.சரவணன், எம்டி, எம்.எல்.ஏ, தனது டுவிட்டர் பக்கத்தில்...

மூங்கில் டிபன் கேரியர்!

சில்வர், பிளாஸ்டிக், ஹாட் பாக்ஸ் என விதவிதமான டிபன் கேரியர்களைப் பயன்படுத்தியிருப்போம். இப்போது புது வரவாக மணிப்பூரிலிருந்து  தயாராகியிருக்கிறது மூங்கில் டிபன் கேரியர். வனத்துறை அதிகாரி ஒருவர் டுவிட்டரில் மூங்கில் டிபன் கேரியரின் புகைப்படங்களைப் பதிவிட, ஆயிரக்

கணக்கில் ஆர்டர்கள் குவிகின்றன. இப்படி மூங்கிலில் டிபன் கேரியர் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை.

இத வாசிக்க முடிஞ்சா மூளை முழு ஆரோக்யமா இருக்குனு அர்த்தமாம்!

7H15 M3554G3

53RV35 7O PR0V3

H0W 0UR M1ND5 C4N D0

4M4Z1NG 7H1NG5!

1MPR3551V3 7H1NG5!

1N 7H3 B3G1NN1NG

17 WA5 H4RD BU7

N0W, 0N 7H15 LIN3

Y0UR M1ND 1S R34D1NG 17  

4U70M471C4LLY

W17H0U7 3V3N

7H1NK1NG 4B0U7 17.

B3 PROUD!

0NLY C3R741N P30PL3

C4N R3AD 7H15!

படிக்க முடியலையா..? நோ ப்ராப்ளம். இதுதான் இந்தச் செய்தி!

THIS MESSAGE

SERVICE TO IMPROVE

HOW EVER MINDS CAN DO

AMAZING THINGS

IMPRESSIVE THINGS

IN THE BEGINNING

IT WAS HARD BUT

NOW ON THIS LINE

YOUR MIND IS READING IT

AUTOMATICALLY

WITHOUT EVEN

THINKING ABOUT IT

BE PROUD

ONLY CERTAIN PEOPLE

CANNOT READ THIS!

நமது மூதாதையர்!

உலகின் அரிய வகை குர ங்கு இனம் கிராஸ் ரிவர் கொரில்லா. இப்போது வனங்களில் சுமார் 300 கிராஸ் ரிவர் கொரில்லாக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. எப்போதாவது அரிதாகத்தான் மனிதர்களுக்குக் காட்சி தரும். பல வருடங்களுக்குப் பிறகு நைஜீரியாவில் உள்ள ஒரு  மலைப்பகுதியில் குட்டிகளுடன் கிராஸ் ரிவர் காட்சி தந்திருக்கிறது. இதைப் புகைப்படமாக்கி இணையத்தில் வெளியிட வைரலாகிவிட்டது.

வாழை இலையில் ஐஸ்கிரீம்

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் குடுவையில் வைத்தே பெரும்பாலும் ஐஸ்கிரீம்கள் விற்கப்படுகின்றன. இந்நிலையில் வாழை இலையில் செய்யப்பட்ட ஒரு குடுவையில் வைத்து விற்கப்பட்ட ஐஸ்கிரீமின் புகைப்படத்தை நார்வேவைச் சேர்ந்த நிபுணர் எரிக் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். அத்துடன் அதில் பிளாஸ்டிக்குக்குப் பதிலாக மூங்கில் ஸ்பூன் பயன்படுத்தப்பட்டிருந்தது. எரிக்கின் வாழை இலை ஐஸ்கிரீம் புகைப்படம் வைரலானதோடு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் பாராட்டைக் குவித்துவருகிறது. இந்தப் புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதுதான் ஹைலைட்.

ரசிகர்!

அதுதான் இல்லை. நவீனமாக பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் முயற்சி செய்கிறார்தான். அட்வான்ஸ் தொழில்நுட்பங்களை தன் இசையில் பயன்படுத்துகிறார்தான். லேட்டஸ்ட் ஸ்டைல்ஸை அறிமுகம் செய்கிறார்தான்.என்றாலும் அவர் ரசிப்பதென்னவோ எம்ஜிஆர் - சிவாஜி படப்பாடல்கள்தான்! வீட்டில் இருந்தால் அவர்களது படப் பாடல்களை அவரே பாடிக் கேட்கலாம்!

முதல் படம் ரிலீசாவதற்குள் மூன்றாவது படத்துக்குத் தயாராகும் இயக்குநர்!

தரமான, வித்தியாசமான படைப்புகளை, ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கொடுக்கும் இயக்குநர் செல்வராகவன், இப்பொழுது நடிகராக ‘சாணிக் காயிதம்’ படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்குகிறார். இவர், ஏற்கனவே ‘ராக்கி’ படத்தை டைரக்ட் செய்து முடித்திருக்கிறார். இன்னமும் ‘ராக்கி’ வெளியாகாத நிலையில் ‘சாணிக் காயிதம்’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ‘எப்படி அண்ணனை கன்வின்ஸ் செய்து நடிக்க வைக்கிறீர்கள்..?’ என அருண் மாதேஸ்வரனை அழைத்து தனுஷ் கேட்டிருக்கிறார். பதிலுக்கு ‘சாணிக் காயிதம்’ கதையை அருண் சொல்லியிருக்கிறார். இம்ப்ரஸ் ஆன தனுஷ், தனக்கொரு கதையை ரெடி செய்யும்படி அருண் மாதேஸ்வரனிடம் சொல்லியிருக்கிறார்.ஆக, முதல் படம் வெளியாவதற்குள் மூன்றாவது படத்துக்கு ரெடியாகிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்!

Related Stories:

>