வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு; டிசம்பர் 2,3,4 ஆகிய தேதிகளில் அதிதீவிர கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது. தெற்கு வங்க கடலில் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மேலும் வலுப்பெற்று புயலாக மாறவாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறியதாவது;  வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் திரிகோணமலையிலிருந்து 750 கிமீ, கன்னியாகுமரியிலிருந்து தென்கிழக்கு பகுதியில் 1150 கிமீ தொலைவிலும் உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மேலும் வலுப்பெற்று புயலாக மாறவாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் பயணித்து 2-ஆம் தேதி மாலை இலங்கை கடற்கரையில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம். இதன் காரணமாக டிசம்பர் 2-ஆம் தேதி தெற்கு தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் அதிகனமழையும் 1,3,4 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். அடுத்த வரும் புயல் நிவர் புயல் போன்று தீவிரமாக இருக்காது என்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய புவி அறிவியியல் துறை செயலாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: