இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, வரும் 7-ம் தேதி கல்லூரிகளை திறக்க சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு..!!

சென்னை: இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, வரும் 7-ம் தேதி கல்லூரிகளை திறக்க சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தங்கள் மாநில சூழலுக்கு ஏற்ப கல்வி நிலையங்கள் திறக்கலாம் என்று சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த சூழலில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டன. இதுதொடர்பான வேலைகளில் தமிழக உயர்கல்வித்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் நிவர் புயல் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வரும் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா? என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, வரும் 7-ம் தேதி கல்லூரிகளை திறக்க சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: