நைஜீரியாவில் 110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை.. வெறிச்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்..ஐநா கடும் கண்டனம்

போகோ ஹராம் : நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினை நிறுவ போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.  கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் அவர்களின் ஆதிக்கம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், நைஜீரியாவின் மைடூகுரி நகரில் அருகே கோஷோபே கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.. அப்போது அங்கு வந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், விவசாய பணிகளை செய்து கொண்டிருந்தவர்களை கடத்தி, கை, கால்களை கட்டிப்போட்டனர். இதையடுத்து துளியும் இரக்கமின்றி 110 விவசாயிகளை கழுத்தறுத்து படுகொலை செய்தனர். மேலும் அங்கிருந்த பெண்களையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

நைஜீரியாவில் அரசுத் தரப்பும், போகோ ஹராம், ஐஎஸ் பயங்கரவாதிகளும் மோதிக்கொள்வதில் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். மக்கள் அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்கள் தருகிறார்கள் என்ற ஆத்திரத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொடூர செயலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories: