×

250 நாள் இடைவெளிக்குப் பின் பழநி மலைக்கோயிலில் நாளைமுதல் வின்ச் இயக்கம்

பழநி: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். கொரோனா தடைக்கு பிறகு கோயில் திறக்கப்பட்டும் வின்ச் மற்றும் ரோப்கார் இயக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள், நடக்க இயலாதவர்கள் மலைக்கோயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 250 நாட்களுக்குப் பின் நாளை (டிச. 1) முதல் 50 சதவீதம் பேர் பயணிக்கும் வகையில் வின்ச் இயக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி கூறுகையில், ‘‘பக்தர்கள் வின்ச் மூலம் மேல் செல்லவும், இறங்கவும் ஆன்லைன் முறையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். எந்த டிக்கெட் கவுன்ட்டரும் திறக்கப்படாது.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் குறிப்பிட்ட வின்ச் பயணத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். வேறு எந்த வின்ச் பயணத்திற்கும் பயன்படுத்த முடியாது. முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலே செல்ல முன்பதிவு செய்த பக்தர்கள் பயண நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக அந்தந்த வின்ச் காத்திருப்பு மண்டபத்தில் தயாராக இருக்க வேண்டும். கீழ்நோக்கிய பயணத்திற்கு, பக்தர்கள் மேல் நிலையத்தில் கிடைக்கக் கூடிய எந்தவொரு வின்ச்சிலும் பயணிக்கலாம். பக்தர்கள் பயணம் செய்யும் போது செல்போன் உள்ளிட்ட எந்த மின்னணு பொருட்கள் மற்றும் சாமான்களை எடுத்து செல்லக் கூடாது’’ என்றார்.

Tags : Winch ,hill temple ,day break ,Palani , Palani
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள்...